புதிய COVID சோதனை விதிகளுக்கு மத்தியில் கனேடிய விமான நிலையங்களில் ஏற்படக்கூடிய தாமதங்களும் குழப்பங்களும் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தவிர, வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் புதிய COVID சோதனைத் தேவைகளை கனடிய மத்திய அமைச்சர்களும் பொது சுகாதார அதிகாரிகளும் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.
அனைத்து பயணிகளும் விமான நிலையங்களில் சோதனை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டால், விமான நிலையங்களில் குழப்பங்களும் நீண்ட வரிசைகளும் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள் நீண்ட காத்திருப்பு நேரங்கள் இல்லாமல் அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் சோதனை செய்ய முடியாது எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.