COVID தொற்றின் புதிய திரிபான Omicron தொற்றாளர்கள் தொடர்ந்து கனடாவில் அடையாளம் காணப்படுகின்றனர்.
செவ்வாய்க்கிழமை Alberta, British Columbia ஆகிய மாகாணங்களில் முதலாவது Omicron தொற்றாளர்கள் பதிவானார்கள்.
ஏற்கனவே கனடாவில் ஐந்து Omicron திரிபின் தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
கனடாவில் இதுவரை Ontario, Quebec, Alberta, British Columbia ஆகிய மாகாணங்களில் இந்த புதிய திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன
Ontarioவில் நான்கு, Quebec, Alberta, British Colombia ஆகிய மாகாணங்களில் தலா ஒன்று என கனடாவில் இதுவரை இந்த புதிய திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன
ஆனாலும் கனடா முழுவதும் உள்ள சுகாதார அதிகாரிகள் பயணக் கட்டுப்பாடுகளின் கீழ் உள்ள நாடுகளில் ஒன்றிலிருந்து பயணம் செய்தவர்களை இலக்கு வைத்து சோதனைகளை முன்னெடுக்கின்றனர்.