February 21, 2025
தேசியம்
செய்திகள்

தடுப்பூசி பெறவில்லையா? விமானங்களிலும் புகையிரதங்களிலும் பயணிக்கத் தடை!

கனடாவில் தடுப்பூசி போடாத பயணிகள் செவ்வாய்க்கிழமை (30) முதல் விமானங்களிலும் புகையிரதங்களிலும் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

12 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி போடப்படாத பயணிகள் செவ்வாய் முதல் கனடாவில் விமானம் அல்லது புகையிரதங்களில் பயணிக்க முடியாது.

பெரும்பாலான நிலையில் எதிர்மறையான COVID சோதனை இதற்கு மாற்றாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தக் கொள்கை October மாதம் 30ஆம் திகதி அமலுக்கு வந்தது.

ஆனாலும் மத்திய அரசாங்கம் தடுப்பூசி போடாத பயணிகளுக்கு குறுகிய கால அவகாசத்தை அனுமதித்தது.

அவர்களின் பயணத்திற்கு முன் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறையான மூலக்கூறு COVID சோதனையை வழங்கும் வகையில் இந்த அவகாசம் அமைந்திருந்தது.

இந்த அவகாசம் செவ்வாய்க்கிழமை முதல் விலக்கப்படுகிறது.

புதிய Omicron திரிபின் கண்டுபிடிப்பு, கனடாவிலும் வெளிநாட்டிலும் பல கடுமையான கட்டுப்பாடுகளுக்கு காரணமாகியுள்ளது.

Related posts

சில பொருட்களின் வரிகள் சனிக்கிழமை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

சீனாவின் தலையீட்டால் தேர்தலில் வெற்றி பெற்ற ஊகத்தை நிராகரித்த Vancouver நகர முதல்வர்

Lankathas Pathmanathan

31 ஆண்டுகளில் மிக அதிகமாக பதிவாகியுள்ள வருடாந்த பணவீக்க விகிதம்

Lankathas Pathmanathan

Leave a Comment