Ontario மாகாணத்தில் COVID தொற்றின் ஏழு நாள் சராசரி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரி திங்கட்கிழமை 788ஆக பதிவானது.
ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை 761ஆக இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை 964ஆக இருந்த ஒரு நாளுக்கான புதிய தொற்றின் எண்ணிக்கை திங்கட்கிழமை 788ஆக குறைந்தது.
Ontario மாகாண பொது சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, COVID தொற்றால் பாதிக்கப்பட்ட புதியவர்கள் 5 முதல் 11 வயதிற்குட்பட்டவர்கள் என தெரியவருகின்றது.
திங்கட்கிழமை மேலும் இரண்டு மரணங்களும் Ontarioவில் பதிவாகின
தவிரவும் திங்கட்கிழமை Quebecகில் 756 தொற்றுக்களும் இரண்டு மரணங்களும், British Columbiaவில் 272 தொற்றுக்களும், Albertaவில் 228 தொற்றுக்களும் ஏழு மரணங்களும் பதிவாகின.
ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் திங்கட்கிழமை தலா 100க்கும் குறைவான தொற்றுக்கள் பதிவாகின.