February 22, 2025
தேசியம்
செய்திகள்

York பிராந்திய காவல்துறை அதிகாரி காயமடைந்த சம்பவத்தில் தமிழர் மீதும் குற்றச் சாட்டு

York பிராந்திய காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்த சம்பவத்தில் தமிழர் உட்பட மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சந்தேக நபர் ஒருவரைப் பின் தொடர்ந்த அதிகாரி ஒருவர் காயமடைந்ததை அடுத்து 40க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

திருடப்பட்ட வாகனத்தில் பயணித்த மூவரை நிறுத்த முற்பட்டபோது ஒருவர் அங்கிருந்து தப்பிச்  சென்றுள்ளார்.

17 வயதான தப்பிச் சென்றவரை தேடிச் சென்ற போது, அவர் காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்கியுள்ளார்.
தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரி உயிர் ஆபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதில் Markham வாசியான 18 வயதான கதீசன் அரவிந்தன் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவாகின.

Related posts

தனது தலைமையை கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினரை குறிவைக்கும் Erin O’Toole

Lankathas Pathmanathan

101ஆவது வயதி காலமான Mississauga முன்னாள் நகர முதல்வர் McCallion

Lankathas Pathmanathan

கனடாவில் நால்வர் இறந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் இருவர் இந்தியாவில் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment