குழந்தை பராமரிப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் மத்திய அரசாங்கத்திற்கும் Ontario மாகாண அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்கின்றன.
புதன்கிழமை இருதரப்பும் குழந்தை பராமரிப்பு குறித்த பேச்சுவார்த்தைகளில் மீண்டும் ஈடுபடும் என Ontario கல்வி அமைச்சர் Stephen Lecce கூறினார்.
ஒன்பது மாகாணங்களும் பிரதேசங்களும் ஏற்கனவே மத்திய அரசாங்கத்துடன் 30 பில்லியன் டொலர், ஐந்தாண்டு குழந்தை பராமரிப்பு திட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
Ontario அதிகாரிகள்புதன்கிழமை மத்திய அரசாங்கத்தை சந்தித்து நியாயமான குழந்தை பராமரிப்பு ஒப்பந்தத்தை விரைவில் எட்டுவதற்கு முயற்சிப்பார்கள் என Stephen கூறினார்.