COVID தொற்று காரணமாக புகலிடக் கோரிக்கையாளர்களை எல்லைக் கடவையில் திருப்பி அனுப்பும் கொள்கையை கனடா முடிவுக்குக் கொண்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட கொள்கை ஆவணத்தின் படி இந்த தகவல் வெளியானது.
March 2020 முதல் October நடுப்பகுதிக்கு இடையில் குறைந்தபட்சம் 544 அகதிகளை அமெரிக்காவுக்கு கனடா திருப்பி அனுப்பியுள்ளது.
இந்த கொள்கை இப்போது ஏன் முடித்துக் கொள்ளப்படுகிறது என்ற கேள்விகளுக்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்கவில்லை.
அதேவேளை தடுப்பூசி போடப்படாத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிகள் குறித்த கேள்விகளுக்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்கவில்லை.