தேசியம்
செய்திகள்

ஆரம்பமானது புதிய நாடாளுமன்ற அமர்வு – புதிய சபாநாயகர் தேர்வு

புதிய கனடிய அரசாங்கத்திற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு திங்கட்கிழமை நடைபெற்றது.

2021 பொதுத் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்குப் பின்னர், 44வது நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக திங்கட்கிழமை ஆரம்பமானது.

நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளன்று, புதிய மற்றும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

நாடாளுமன்ற அமர்வின் முதல் நடவடிக்கையாக திங்கட்கிழமை புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக வடக்கு Ontarioவின் Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Anthony Rota மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேவேளை நாடாளுமன்ற வளாகம், மேல்சபை கட்டிடங்களுக்குள் நுழைய விரும்பும் அனைவரும் முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் அல்லது சரியான மருத்துவ விலக்கு பெற வேண்டும் என்ற புதிய விதிகள் நடைமுறைக்கு வந்த முதல் நாளும் இதுவாகும்.

செவ்வாய்க்கிழமை மாலை பிரதமர் Justin Trudeauவின் சிறுபான்மை Liberal அரசாங்கத்திற்கான முன்னுரிமைகளை கொண்ட சிம்மாசன உரை நிகழவுள்ளது.

Related posts

தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது

Lankathas Pathmanathan

கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்: அமெரிக்கா!

Gaya Raja

நாடு கடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு விரைவான, அமைதியான தீர்மானத்திற்கு அரசாங்கம் தயாரார்: பிரதமர் Trudeau

thesiyam

Leave a Comment