February 22, 2025
தேசியம்
செய்திகள்

Ontarioவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 700க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவு

Ontarioவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 700க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமையன்று 728 புதிய தொற்றுக்களையும் ஐந்து மரணங்களையும் உறுதிப்படுத்தினர்.

Ontarioவில் வெள்ளிக்கிழமை 793 புதிய தொற்றுக்களும், வியாழக்கிழமை 711 தொற்றுக்களும் பதிவாகின.

இந்த நிலையில் Ontarioவில் நாளாந்த தொற்றின் ஏழு நாள் சராசரி தொடர்ந்தும் அதிகரிக்கிறது.

Ontarioவில் நாளாந்த தொற்றின் ஏழு நாள் சராசரி இப்போது 635 ஆக அதிகரித்துள்ளது.

இது கடந்த வாரத்தில் 563 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

11.1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள், அல்லது தகுதியுள்ள மக்கள் தொகையில் சுமார் 85 சதவீதம் பேர், இரண்டு COVID தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

Related posts

தீ விபத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மேற்கு Toronto தேவாலயம் முற்றிலுமாக அழிவு

Lankathas Pathmanathan

கனடிய வீட்டின் சராசரி விலை 20 சதவீதம் குறைவு

Lankathas Pathmanathan

பொருளாதார நோபல் பரிசு பெற்றவரில் கனடியரும் அடங்குகிறார்!

Gaya Raja

Leave a Comment