குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி பாவனைக்கான ஒப்புதலை மத்திய அரசாங்கம் வெள்ளிக்கிழமை அறிவிக்கவுள்ளது.
5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான COVID தடுப்பூசிக்கு Health கனடா ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவிக்க உள்ளது.
குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசியின் அங்கீகாரம் தொடர்பான செய்திகளை பகிர்ந்து கொள்வதற்காக மத்திய அரசு வெள்ளிக்கிழமை காலை ஒரு ஊடக சந்திப்பை திட்டமிட்டுள்ளது.
தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டவுடன் குழந்தைகளுக்கு அவற்றை வழங்க தயாராக இருப்பதாக ஏற்கனவே மாகாணங்கள் தெரிவித்துள்ளன.
குழந்தைகளுக்கான 2.9 மில்லியன் தடுப்பூசிகளின் விநியோகத்தை கனடா எதிர்பார்க்கிறது,
இது 5 முதல் 11 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் தடுப்பூசியை வழங்குவதற்கு போதுமானதாகும்.
Health கனடாவின் அங்கீகாரத்தை தொடர்ந்து விரைவில் கனடாவிற்கு குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை விநியோகிக்க தயாராக இருப்பதாக வெள்ளிக்கிழமை Pfizer கனடா ஒரு அறிக்கையில் கூறியது.
குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசியை அங்கீகரிக்குமாறு October மாதம் 18ஆம் திகதி Health கனடாவிடம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.