கனேடிய எல்லையில் சில COVID நடவடிக்கைகள் தளர்த்தப்படும் அறிவித்தல் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது.
நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனை குழுவின் பரிந்துரைகளையும் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் வெளியிடுவார்கள்
எல்லையின் ஊடாக புதிய தொற்றுக்களின் பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தளர்த்துவது குறித்து மத்திய அமைச்சர்கள் விவரங்களை வெளியிட உள்ளனர்.
குறுகிய பயணங்களுக்கான PCR சோதனை தேவைகளை நீக்கும் முடிவை கனடிய அதிகாரிகள் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தவுடன், கனடாவை விட்டு வெளியேறி 72 மணி நேரத்திற்குள் மீண்டும் நாட்டிற்கு திரும்பும் பயணிகள், COVID சோதனையின் எதிர்மறையான ஆதாரத்தைக் காட்ட வேண்டிய தேவை இல்லை என கூறப்படுகிறது.
72 மணி நேரத்திற்கும் மேலான பயணங்களுக்கு PCR சோதனைத் தேவை தொடர்ந்து அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.