Ontario உயர்நிலைப் பாடசாலைகள் February மாதம் முதல் வழமையான கல்வி முறைக்கு திரும்ப அனுமதிக்கப்படுகின்றன.
இதன் மூலம் COVID தொற்றின் ஆரம்பத்தில் இருந்து முதல் முறையாக உயர்நிலைப் பாடசாலை மாணவர்கள் ஒரு சாதாரண அட்டவணைக்கு திரும்புகின்றனர்.
மேல்நிலை பாடசாலைகள் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசியை பெற்றுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் Stephen Lecce வியாழக்கிழமை அறிவித்தார்.
பாடசாலை வாரியங்கள் தங்கள் உள்ளூர் பொது சுகாதார பிரிவின் ஆதரவைப் பெற்றால் விரைவில் மாற்றத்தை செய்ய முடியும் என்வும் அவர் கூறினார்.
இந்த அறிவிப்பு Ontario பொது பாடசாலை கல்விச் சபை சங்கத்தின் ஒப்புதலை பெற்றது.