தேசியம்
செய்திகள்

Albertaவில் ஐந்தாவது அலையின் ஆபத்து உள்ளது: தலைமை மருத்துவர் எச்சரிக்கை

Albertaவில் COVID தொற்றின் ஐந்தாவது அலையின் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.

குளிர் மாதங்களில் COVID குறித்து விழிப்புடன் இருக்குமாறு மக்களுக்கு மாகாணத்தின் தலைமை மருத்துவர் நினைவூட்டினார்.

தொற்றின் பருவநிலை காரணமாக ஐந்தாவது அலையைக் காணக்கூடிய ஆபத்து இருப்பதாகக் வைத்தியர் Deena Hinshaw கூறினார்.

COVID கடத்தும் ஆக்கிரமிப்பு தன்மையையும், குறிப்பாக Delta மாறுபாட்டைத் தணிக்க தேவையான நகர்வுகளை Alberta வாசிகள் எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்

தொடர்ந்து சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால், வரும் மாதங்களில் மேலும் கட்டுப்பாடுகளை எதிர்பார்க்கவில்லை என Hinshaw ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

புதன்கிழமை Albertaவில் 412 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 3 மரணங்களும் பதிவாகின.

Related posts

சீனாவின் தேர்தல் குறுக்கீடு திட்டம் குறித்து பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது?

Lankathas Pathmanathan

Ontarioவில் மூன்றாவது நாளாகவும் இனங்காணப்பட்ட 1,700க்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

RCMP இடைக்கால ஆணையராக Mike Duheme நியமனம்

Lankathas Pathmanathan

Leave a Comment