Conservative கட்சியின் தேசிய குழுவில் இருந்து Senator Denise Batters நீக்கப்பட்டுள்ளார்.
கட்சித் தலைவர் Erin O’Toole தலைமை மதிப்பாய்வை எதிர்கொள்ள வேண்டும் என Batters மனு ஒன்றை கட்சித் தலைமைக்கு அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் Battersசை, கட்சியின் தேசிய குழுவில் இருந்து விலத்துவதாக O’Toole அறிவித்துள்ளார்.
Batters இந்த மனு அனுப்பப்பட்ட சில மணிநேரங்களுக்குள், அவரது முன்மொழிவு கட்சியினால் நிராகரிக்கப்பட்டது.
Senator Batters எடுக்கும் முயற்சி கட்சியின் அரசியலமைப்பிற்கு இணங்கவில்லை என Conservative கட்சியின் தலைவர் Rob Batherson குறிப்பிட்டிருந்தார்.
முழுக் கட்சியின் முயற்சிகளையும் ஒரு தனி நபர் அவமதிப்பதை கட்சியின் தலைவர் என்ற முறையில் ஏற்றுக் கொள்ள முடியாது என O’Toole ஒரு அறிக்கையில் கூறினார்.
முன்னாள் பிரதமர் Stephen Harperரினால் Senatorராக நியமிக்கப்பட்ட Batters, முன்னாள் தலைவர் Andrew Scheerக்கு நெருக்கமானவர் என்பதும் கடந்த வருடம் கட்சியின் தலைமைப் போட்டியில் Peter MacKayயை ஆதரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.