தேசியம்
செய்திகள்

COVID பரிசோதனையில் Ontarioவில் விரைவில் வரவுள்ள மாற்றங்கள்

Ontarioவில் COVID அறிகுறிகள் உள்ளவர்கள் மருந்தகங்களில் பரிசோதனை செய்துகொள்ள அனுமதிக்கப்படவுள்ளது.

அரசாங்கம் அதன் COVID பரிசோதனையை மருந்தகங்களில் அறிகுறியுள்ள நபர்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்த உத்தேசித்துள்ளதாக தெரியவருகின்றது.

தற்போது, தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லாதவர்கள் மட்டுமே, COVID PCR பரிசோதனையை மேற்கொள்ள மருந்தகங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

COVID பரிசோதனையை முன்னெடுத்து முடிந்தவரை விரைவாக முடிவுகளைப் பெற விரும்பும் எவரும் இந்த முறையை பயன்படுத்த Ontario சுகாதார அமைச்சகம் அனுமதிக்க உள்ளது.

COVID PCR சோதனை திட்டத்தில் இந்த  மாற்றங்களை விரைவில் சுகாதார அமைச்சகம் அறிவிக்கவுள்ளது.

மருந்தகங்களில் COVID அறிகுறி பரிசோதனையை அனுமதிக்கும் மாற்றங்கள் மாகாணம் முழுவதும் நிகழும் என அரசாங்க தரவுகள்  உறுதிப்படுத்தியுள்ளது.

Related posts

கனடாவின் முதல் முழு அளவிலான வணிக மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் திறப்பு

Lankathas Pathmanathan

பிரதமரால் கனடியர்கள் விரக்தி: NDP தலைவர்

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தலில் நாற்பதுக்கும் அதிகமான வேட்பாளர்கள்?

Lankathas Pathmanathan

Leave a Comment