ஒரு தமிழர் உட்பட 34 வீடு விற்பனை முகவர்கள், Ontarioவில் வீடு விற்க அனுமதிக்கும் மாகாண உரிமையை இழந்துள்ளனர்.
இவர்களின் வீடு விற்பனை கல்வி திட்ட தேர்வுகள் தொடர்பாக வேண்டுமென்றே ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி கண்டறியப்பட்டதை தொடர்ந்து இவர்கள் தமது வீடு விற்கும் மாகாண உரிமையை இழந்துள்ளனர்.
RECO இன் இணையதளம் October 29 அன்று, 34 வீடு விற்பனையாளர்களின் பதிவுகளை இரத்து செய்துள்ளதைக் காட்டுகிறது. வீடு விற்பனையாளராகத் தகுதி பெறுவதற்குத் தேவையான நியமிக்கப்பட்ட கல்விப் படிப்புகளை நிறைவு செய்யத் தவறியதற்காக இவர்களின் பதிவு இரத்து செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் பானுகா கனகலிங்கம் என்ற தமிழரும் அடக்குகின்றார்.
தேர்வுகளின் முடிவில் நேர்மையின்மை குறித்து அறிந்திருப்பதாகவும், நேர்மையின்மை அல்லது சந்தேகத்திற்குரிய நடத்தைக்கான பிற நிகழ்வுகளை அடையாளம் காண கடந்த கால, நிகழ் கால மற்றும் எதிர் கால தேர்வுகளை மறுபரிசீலனை செய்வதாகவும் Humber கல்லூரி ஒரு அறிக்கையில் கூறியது. இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட நேர்மையின்மை குறித்த விவரங்கள் இதுவரை தெளிவாக வெளியாகவில்லை.
இதற்குப் பொறுப்பானவர்களை இடைநீக்கம் செய்துள்ளதாக Humber கல்லூரி கூறுகிறது. மேலும் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ள பதிவு செய்யப்பட்ட வீடு விற்பனையாளர்கள் தொழில்துறை கட்டுப்பாட்டாளரான Ontarioவின் வீடு விற்பனை சபைக்கு (RECO) அறிவித்துள்ளதாக Humber கல்லூரி தனது அறிக்கையில் தெரிவித்தது.