Liberal அரசாங்கத்திற்கும் புதிய ஜனநாயக கட்சிக்கும் இடையிலான கூட்டணி குறித்த யோசனையை Liberal கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் நிராகரித்தார்.
Liberal கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் Mark Holland இந்த கூட்டணி குறித்த யோசனையை திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நிராகரித்தார்.
அனைத்து கட்சியுடனும் தமது அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை தொடர்வதாக கூறிய Holland, அந்த பேச்சுகளில் கூட்டணி குறித்த யோசனைகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.
கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது Liberal சிறுபான்மை அரசாங்கத்திற்கு NDP கட்சி ஆதரவு வழங்கியது.
எதிர்வரும் 22ஆம் திகதி கனடிய நாடாளுமன்ற சட்டசபை அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கின்றன.
September மாதம் 20ஆம் திகதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் திங்களன்று முதல் தடவையாக Liberal கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது இன்று குறிப்பிடத்தக்கது.