September 30, 2026
தேசியம்
செய்திகள்

ஒலிம்பிக் போட்டியில் கனடா 21 பதக்கங்கள் வெல்லும்!

Tokyo ஒலிம்பிக் போட்டியில் கனடா 4 தங்கப் பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒலிம்பிக் போட்டிகளில் 21 பதக்கங்களை கனடா வெற்றிபெறும் என உலகளாவிய தரவு நிறுவனம் கணித்துள்ளது.

கனடா நான்கு தங்கம், எட்டு வெள்ளி மற்றும் ஒன்பது வெண்கல பதக்கங்களை வென்று 15வது இடத்தில் வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

2016 Rio ஒலிம்பிக்கில், கனடா 22 பதக்கங்களை வெற்றிபெற்று தரவரிசையில் 22வது இடத்தில் வந்தது.

1964 ஆம் ஆண்டில், Tokyoவில் கடைசியாக கோடைகால ஒலிம்பிக் போட்டி நடைபெற்றபோது, கனடா ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களை வென்றது குறிப்பித்தக்கது.

Related posts

சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்: Ottawa காவல்துறை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

உலக தடகள போட்டியில் கனடா வென்றது வெள்ளி!

Lankathas Pathmanathan

ஹிஜாப் அணிந்த ஆசிரியர் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டது ஒரு கோழைத்தனமான நடவடிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment