தேசியம்
கட்டுரைகள்

தமிழ் சமூகத்திற்கான ஒரு புதிய இலக்குக் கொண்ட சமூக மையம்

தமிழ் சமூகத்திற்கான ஒரு புதிய இலக்குக் கொண்ட சமூக மையம்Scarboroughவில் அமையவுள்ள தமிழ் சமூக மைய செயற்றிட்டத்தின் இயக்குனர் சபைகட்டிடத்தினதும் அதைச் சூழவுள்ள பகுதிகளினதும்பூர்வாங்கவடிவமைப்பொன்றைவெளியிட்டுள்ளது.Toronto நகரம் இப்போது இந்தியா மற்றும் இலங்கைக்கு வெளியே மிகப்பெரிய தமிழ்பேசும் சமூகத்தை கொண்டுள்ளது. Torontoவின் தமிழ் சமூகம் 1980களில் சில நூறாக இருந்த நிலையில்,2016ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 105,000க்கு மேல் அதிகரித்துள்ளது.இந்தப் பெருகிவரும் மக்கள் தொகை Toronto முழுவதும் பரவி உள்ளது. ஆனாலும் வடகிழக்குScarborough நகரத்தில் அதிக அளவில் தமிழ் பேசுவோர் வசிக்கிறார்கள். இந்தப் பகுதியில் தான்தமிழ் சமூகத்திற்கான ஒரு புதிய சமூக மையம் அமைய வுள்ளது.தமக்கு கிடைக்கும் சேவைகளிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக, தமக்கானதொருசமூக மையத்தை அமைக்கவென கனேடிய தமிழர்கள் ஒரு தசாப்தகாலமாக பல்வேறு விதமானமுன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்துள்ளார்கள். அந்த முன்னெடுப்புகளின் பலாபலனாகவேScarboroughவின் வடகிழக்குப் பகுதியிலே தமிழர்களுக்கான ஒருங்கிணைந்த சேவைகளைவழங்குவதோடு ஏனைய சமூகத்தவர்களும் பயனடைந்து கொள்ளத்தக்க வகையிலானதொரு சமூக
மையத்தை அமைக்கும் இந்தத் திட்டம் உருவெடுத்துள்ளது. Morningside and Finch பகுதியில் 311 Staines வீதியில் உள்ள காணி, 2007ஆம் ஆண்டு Toronto நகரசபையால் கொள்வனவு செய்யப்பட்டது. இயற்கை பகுதியாக இருந்த இந்த இடம், பின்னர் 40மில்லியன் டொலருக்கான ஒரு புதிய சமூக மையம் அமைவதற்கான சரியான இடமாகஅடையாளம் காணப்பட்டது. இந்த திட்டத்திற்கு பல்வேறு மட்ட அரசாங்கங்கள் 26.3 மில்லியன்டொலர்கள் நிதி உறுதிமொழியை வழங்கியுள்ளன. ஏனைய தொகையை தமிழர் சமூகம் சேகரிக்கவேண்டிய தேவை உள்ளது. 2020 Octoberரில், 311 Staines வீதியை எதிர்காலத்தில் அமையவுள்ள தமிழ் சமூக மையத்திற்கானநிலமாக Toronto நகரசபை ஒருமனதாக ஏற்று வாக்களித்தது. 16,722 சதுர மீற்றர்கள் அல்லது 4.13ஏக்கர்கள் அளவுடைய இந்தக் காணியானது ஏறக்குறைய 25 மில்லியன் டொலர்கள்பெறுமதியுடையது. இந்தக் காணிக்கான குத்தகை ஒப்பந்தம் ஆண்டொன்றுக்கான குத்தகை ஒருடொலரும் அதற்கான வரியும் என்ற வகையிலே தமிழ் சமூக மையத்திற்கும் Torontoநகராட்சிக்குமிடையில் இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும்.Morningside Heights சுற்றாடலை இந்த தமிழ் சமூக மையம் உருமாற்றிவிடும். இந்தப் பகுதியில்வாழும் சமூகத்தின் பொருளாதாரம், பண்பாடு, அரசியல், உடல்நலம் ஆகியன சார்ந்த வேணவா,வெறும் கட்டடம் மட்டுமல்லாத ஒரு கட்டுமானத் தோற்றத்தில் உயிர்பெறும். தமிழ் சமூகமையமானது இயற்கைச் சுற்றாடலைப் பேணவும் முன்னேற்றவும் விழையும் ஒரு அகப்படுத்திஇணைந்த குமுகத்தைக் கட்டியெழுப்ப உதவும் என தமிழ் சமூக மைய செயற்றிட்டத்தின்இயக்குனர் சபை நம்பிக்கை வெளியிட்டது. வெளியாகியுள்ள இந்த சமூக மையத்திற்கான பூர்வாங்க வடிவமைப்புகள் 311 Staines வீதியின்வாய்ப்புகளும் கட்டுப்பாடுகளும் எவ்வாறு தமிழ் சமூக மையத்திற்காக சாதகமாகப்பயன்படுத்தப்படலாம் என எடுத்துக் காட்டுகின்றன. இந்த வடிவமைப்புக்கான அடிப்படைவழிகாட்டிகளாக ஐந்து விடயங்களை இயக்குனர் சபை மனதிலிருத்தியுள்ளது:(அ)கலந்தாய்வுகள் அடிப்படையில் சேவை திட்ட வெளிகள் (programming space based onconsultations)(ஆ) சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான உறுதிப்பாடு (commitments to the environment)(இ) பூர்வகுடி குமுகங்களை மதித்தல் (respect to Indigenous communities)(ஈ) குடியிருப்பாளர்களின் கரிசனங்களுக்கான தீர்வுகள் (solutions to resident concerns)(உ) தமிழ்ப் பண்பாடும் வரலாறும் (Tamil culture and history)
தமிழரின் பாரம்பரியக் கட்டடக்கலை (மைய முற்றம்), தமிழ் மொழியும் சங்க இலக்கியக்
கோட்பாடுகளும் (ஐந்திணைகள்), புலப்பெயர்வும் ஏதிலி வாழ்வும் புகலடைவையும் உள்ளடக்கியதமிழரின் அண்மைக்கால வரலாறு (கப்பல்) ஆகியவற்றால் வடிவமைப்பு அகத்தூண்டல்பெற்றுள்ளது.தமிழ் சமூக மையமானது பன்முகப்பட்ட தமிழ்க் குமுகத்தின் தற்போதுள்ளதும் வளர்ந்துவருவதுமான தேவைகளைப் பூர்த்தி செய்யவென வெளிகளையும் சேவைகளையும் உள்ளடக்கியஇயக்காற்றல் மிக்க, புதுமை விழைகின்ற, பன்நோக்கமுள்ள, பிரிவினைச் சார்பற்ற கட்டடமாகஅமைய விழைகிறது.
இந்தக் கட்டடமானது பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கும்:
(அ) உள்ளக உடற்பயிற்சிக்கூடம் மற்றும் வெளியக விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு வசதிகள்.(ஆ) கல்விச் செயற்பாடுகளுக்கும் தொடர்பாடல் நிகழ்வுகளுக்கும் பயன்படக்கூடிய பன்நோக்குவெளிகள்.(இ) நூலகம், ஆவணக்காப்பகம், அருங்காட்சியகம், கலையரங்கம் உள்ளிட்ட பண்பாட்டு வசதிகள்(ஈ) தமிழ்க் குமுகம் எதிர்கொள்வதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் பூர்வகுடி, கறுப்பின,கரிபியன், தென்னாசிய மக்களுக்கும் ஏனைய இனத்துவப்படுத்தப்பட்ட மக்களுக்குமான வளங்கள்.வெளியாகியுள்ள வடிவமைப்புக் குழு வழிநடத்துனர்களில் கனடாவின் முடிக்குரிய கட்டடக்கலைஞர் நிறுவனத்தின் அங்கத்தவர் (Member of the College of Fellows of the Royal ArchitecturalInstitute of Canada) Andrew King இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தவிரவும் தமிழ் சமூகமையத்தின் வடிவமைப்புக் குழுவானது தமிழர், பூர்வக்குடிகள், ஆங்கில மொழி பேசுவோர்,பிரெஞ்சு மொழி பேசுவோர், ஆசிய மொழிகளைப் பேசுவோர் உள்ளிட்ட பண்பாட்டுப்பின்னணிகளைக் கொண்டவர்களையும், கட்டடவியல், கலை, இலக்கியம், நிலத்தோற்றவியல்ஆகிய துறைகளைச் சார்ந்தவர்களையும் ஒரு புள்ளியிலே ஒன்றிணைக்கும் வகையிலேஉருவாக்கப்பட்டிருக்கிறது.

வட அமெரிக்காவின் ஆதிக் குடிகளின் நிலப்பகுதியிலும் நாம் இன்று குடியிருக்கிறோம் என்பதைமுழுமையாக ஒப்புக்கொண்டு இத்தமிழ் சமூக மையம் உருவாக்கப்படவுள்ளது. இதன்பின்னணியில் முதலாம் கட்டக் கலந்தாய்வுகளின் பிரதான அங்கமாக பூர்வகுடிக்
குமுகங்களுடனான கலந்தாய்வுகள் நடைபெற்றன.இந்தச் செயற்றிட்டத்தின் வெற்றிக்கென பூர்வகுடிக் குமுகங்களுடன் ஒத்திசைந்து செயலாற்ற தமிழ்சமூக மையம் திடம் பூண்டுள்ளது. முதற்குடியினதும் பிரதிநிதிகளுடன் அடிக்கடி தொடர்பாடி,அவர்களுடனான உறவைத் தொடர்ந்தும் வளர்த்து வருவதோடு, செயற்றிட்டம் பற்றியநிலவரத்தையும் தமிழ் சமூக மைய செயற்றிட்டத்தின் இயக்குனர் சபை தெரிவித்து வருகிறது.
தமிழ் சமூக மையத்தின் இந்தச் செயற்றிட்டத்திற்கான ஒத்திசைவான அணுகுமுறையை Huron-Wendat தேசம் வரவேற்கிறது. குமுகத்தின் தேவைகளை நிறைவேற்றும் கட்டடமொன்றைஅமைக்கும் அதேநேரம், இந்த அமைவிடத்தையும் இயற்கைச் சுழலையும் பாதுகாக்கவெனபூர்வாங்க வடிவமைப்பிலே கணிசமானவளவு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இந்தச் செயற்றிட்டம் உயிர்பெற்றுவருகையில் இந்தப் பகுதியிலே Huron-Wendat வரலாற்றைநினைவேந்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டடையவென தமிழ் சமூக மையத்துடன் தொடர்ந்தும்இணைந்து பணியாற்ற நாம் ஆவலாய் உள்ளோம் என Huron-Wendat தேசம் தெரிவித்துள்ளது.தொடர்ந்தும் சமூகத்தின் எதிர்வினைகளையும் கருத்துகளையும் அமையவுள்ள தமிழ் சமூக மையசெயற்றிட்டத்தின் இயக்குனர் சபை எதிர்பார்த்துள்ளது.

ரம்யா சேது

Related posts

பொங்கல் நிகழ்வு ஒத்திவைப்பு CTC முன்னெடுக்கும் ஒரு “தற்காலிக கவனச்சிதறல்” முயற்சி!

Lankathas Pathmanathan

மரபுத் திங்களும் …… மாமிசப் பொங்கலும்  ……

thesiyam

Brampton நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதை எதிர்க்க CTC பயன்படுத்தப்படுகிறது?

Lankathas Pathmanathan

Leave a Comment