முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடியர்களுக்கு நில எல்லையை அடுத்த மாதம் மீண்டும் திறக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
ஒரு நீண்ட மற்றும் முன்னோடி இல்லாத பயணக் கட்டுப்பாடுகளுக்குப் பின்னர், அடுத்த மாதம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடியர்களுக்கு அமெரிக்கா தனது நில எல்லையை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளது.
கனடாவிலும் மெக்சிகோவிலுமிருந்து செல்லும் தடுப்பூசி போடப்பட்டவர்கள் அடுத்த மாதம் நில எல்லை கடப்புகளில் வரவேற்கப்படுவார்கள் என வெள்ளை மாளிகை செவ்வாய்க்கிழமை இரவு உறுதிப்படுத்தியது.
நில எல்லையை கடப்பதற்கு தடுப்பூசி சான்று தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் என்ன தடுப்பூசிகள் ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது கலப்பு தடுப்பூசிகள் பெற்றவர்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்களா போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.
உலகில் பாதுகாப்பற்ற அதிக நீளமான சர்வதேச எல்லையான கனடா அமெரிக்கா எல்லை கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.