தேசியம்
செய்திகள்

உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான கனேடிய தேசிய நாளில் Gord Downie & Chanie Wenjack நிதியத்துக்கு (DWF) கனேடியத் தமிழர் பேரவை நிதி வழங்கல்!

உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான கனேடிய தேசிய நாளை கனேடியத் தமிழர் பேரவை Six Nations of the Grand River முதற்குடியினருடன் கடைப்பிடித்தது.

கடந்த வியாழக்கிழமை (September 30) கனடாவில் முதலாவது உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான தேசிய நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த நாளில், கனேடியத் தமிழர் நிதிசேர் நடையில் சேகரிக்கப்பட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனேடிய டொலர்களை Gord Downie & Chanie Wenjack நிதியத்துக்கு (DWF) கனேடியத் தமிழர் பேரவை வழங்கியது.

கனடாவின் உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணையத்தின் முன்னாள் இடைக்கால நிர்வாக இயக்குனரான Bob Watts DWF நிதியம் சார்பாக நிதியைப் பெற்றுக் கொண்டார்.

இந்த நிதி பதின்மூன்றாவது வருடாந்த கனேடியத் தமிழர் நிதிசேர் நடை பவனியின் மூலம் சேகரிக்கப்பட்டது.

முதற்குடி மக்களுக்கும் அவர்கள் அல்லாத சமூகங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தை DWF நிதியம் ஊக்குவிக்கிறது.

முதற்குடி மக்களின் உண்மையான வரலாற்றையும் வதிவிடப் பள்ளிகள் என்ற முறைமையினால் தற்போது எழுந்துள்ள தாக்கம் குறித்த கல்வியையும் கனேடியர்கள் பெறுவதற்காக DWF நிதியம் உழைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Related posts

தடுப்பூசி பெறுவதற்கான முன்பதிவுகள் Ontarioவில் இரட்டிப்பாகியுள்ளன!

Gaya Raja

மருத்துவமனைகளின் கொடூரமான நிலையை பார்வையிடுங்கள்: Alberta முதல்வருக்கும் சுகாதார அமைச்சருக்கும் அழைப்பு!

Gaya Raja

Toronto – St. Paul தொகுதி இடைத் தேர்தல் முடிவால் அரசியல் அதிர்வலைகள்?

Lankathas Pathmanathan

Leave a Comment