தேசியம்
செய்திகள்

கட்சித் தலைமையிலிருந்து O’Toole விலக்கப்படுவாரா?

கட்சித் தலைமை பதவியில் இருந்து Erin O’Tooleலை விலக்குவதற்கான அதிகாரத்தை இயற்றலாமா என செவ்வாய்க்கிழமை Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

Conservative கட்சி, தேர்தலுக்குப் பிந்தைய தனது முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை செவ்வாய்கிழமை நடத்தவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் O’Tooleலை கட்சித் தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கான அதிகாரத்தை தங்களுக்கு வழங்கலாமா வேண்டாமா என புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சீர்திருத்தச் சட்டத்தை கட்சி கடைப்பிடிப்பதற்கு ஏற்ப, கூட்டத்தின் போது எதிர்பார்க்கப்படும் நான்கு முக்கிய வாக்கப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

தேர்தல் தோல்விக்குப் பின்னர் O’Toole கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டுமா என்பதில் Conservative கட்சியின் உள்ளக கருத்து வேறுபாட்டின் மத்தியில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Related posts

Haiti நெருக்கடி குறித்து பிரதமர் கவலை!

Lankathas Pathmanathan

5 மில்லியன் டொலர் வெற்றி பெற்ற தமிழர்கள்

சர்வதேச சட்டத்திற்கு மாறாக செயல்படும் இந்தியா? – கனடா கண்டனம்!

Lankathas Pathmanathan

Leave a Comment