வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட அச்சுறுத்தல் விசாரணையில் Torontoவைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார்.
ஓரினச் சேர்க்கையாளர்களான இரண்டு பெண்களின் திருமணத்தை நடத்தி வைத்த ரங்கநாதக் குருக்களை மிரட்டிய குற்றச்சாட்டில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Torontoவைத் தளமாகக் கொண்ட சட்டவாளர் உமாநந்தினி நிசாந்தன் Toronto காவல்துறையினரால் கடந்த வெள்ளிக்கிழமை (October 1) கைது செய்யப்பட்டார்.
ஓரினச் சேர்க்கையாளர்களான இரண்டு பெண்களின் திருமணத்தை நடத்தி பின்னர் விடுக்கப்பட்ட மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் குறித்து இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
47 வயதான உமாநந்தினி நிசாந்தன் மீது மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுடன், குற்றவியல் துன்புறுத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக Toronto காவல்துறை தெரிவித்தது.
November 16 பிற்பகல் 2 மணிக்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.