உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான தேசிய நாளில் நல்லிணக்க நிகழ்வுகளுக்கு பதிலாக பிரதமர் தனது குடும்பத்துடன் விடுமுறையை களித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை கனேடிய முதற்குடிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைவுகூரும் வகையில் உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான தேசிய நாள் அனுஸ்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் வியாழன்று பிரதமர் Justin Trudeau தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட British Columbiaவுக்கு பயணிக்க முடிவு செய்த விடயம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
வியாழக்கிழமை பிரதமர் Ottawaவில் பிரத்தியேக சந்திப்புகளை மேற்கொண்டுள்ளதாக அவரது நாளாந்த அட்டவணை பயணத்திட்டத்தில் முதலில் குறிப்பிடப்பட்டிருந்தது
ஆனாலும் அவரது British Colombia மாகாண விடுமுறை பயணம் வெளியான பின்னர், பிரதமர் அலுவலகம் அப்பதிவை மாற்றி, அவர் விடுமுறையில் இருக்கும் விடயத்தை உறுதிப்படுத்தியது.
பிரதமரின் இந்த முடிவு, முதற்குடிகள் எதிர்கொண்ட நீடித்த வன்முறைகளை அலட்சியம் செய்ததாக விமர்சனங்கள் வெளியாகின.
பிரதமர் வியாழக்கிழமை விடுமுறையில் ஈடுபட்டதை Conservative கட்சித் தலைவர் Erin O’Toole விமர்சித்திருந்தார்.