தேசியம்
செய்திகள்

மீண்டும் திங்களன்று நான்காயிரத்திற்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் பதிவு!  

Albertaவில் வார விடுமுறை முதல் திங்கள் வரை 5,181 புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின.

திங்கட்கிழமை மாத்திரம் 1,758 தொற்றுக்கள் Albertaவில் பதிவாகின.

மேலும் 23 மரணங்கள் Albertaவில் சுகாதார அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டன.

Albertaவில் தீவிர சிகிச்சை பிரிவில் திங்கள் மாலையுடன்  312 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

British Columbiaவில் திங்கட்கிழமை 706  தொற்றுகள் பதிவாகின.

மூன்று தினங்களில் மொத்தம் 2,239 புதிய தொற்றுகள் British Columbiaவில் பதிவாகின.

திங்கள் தொற்றின் காரணமாக மரணங்கள் எதையும் Ontario மாகாணம் பதிவு செய்யவில்லை.

திங்கள் மொத்தம் 613 புதிய தொற்றுக்கள் Ontarioவில் பதிவாகின.

தவிரவும் Quebecகில் 519, Saskatchewanனில் 398 தொற்றுக்களும் இரண்டு மரணங்களும் திங்கட்கிழமை  சுகாதார அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டன.

ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் தலா 100க்கும் குறைவான தொற்றுக்கள் பதிவாகின.

திங்களன்று நாடளாவிய ரீதியில் மொத்தம் 4,281 தொற்றுக்கள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடாளுமன்றத்திற்கு 52 புதிய உறுப்பினர்கள் தேர்வு!

Gaya Raja

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 24ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

அவசரகாலச் சட்ட விசாரணையில் சாட்சியமளிக்கும் பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment