தேசியம்
செய்திகள்

சீனா சிறையில் இருந்து விடுதலையான இரண்டு கைதிகளையும் விமான நிலையத்தில் வரவேற்ற கனேடிய பிரதமர்!

சீனாவில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு கனடா வந்தடைந்த இரண்டு கைதிகளையும் விமான நிலையத்தில் கனடிய பிரதமர் வரவேற்றுள்ளார்.

1,000 நாட்களுக்கு மேல் சீனாவில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனடியர்களும் பாதுகாப்பாக கனடா வந்தடைந்தனர்.

December மாதம் 10ஆம் திகதி 2018ஆம் ஆண்டு முதல் Michael Spavor மற்றும் Michael Kovrig ஆகியோர் உளவு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சீனாவின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

Huawei நிர்வாக அதிகாரி Meng Wanzhouக்கு எதிரான நாடு கடத்தல் உத்தரவை கனடா கைவிட்ட நிலையில் இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

சீனாவுக்கான கனடாவின் தூதர் Dominic Bartonனுடன் விடுதலை செய்யப்பட்ட கனேடியர்கள் இருவரும் விமானமொன்றில் சீனாவில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலையில் Calgary சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்கள் இருவரையும் பிரதமர் Justin Trudeau விமான நிலையத்தில் நேரடியாக சென்று வரவேற்றார்.

இவர்கள் இருவரின் விடுதலையும் கனடா முழுவதிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

Conservative தலைவர் Erin O’Toole, NDP தலைவர் Jagmeet Singh உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இவர்களின் விடுதலை குறித்த செய்திக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related posts

Nova Scotiaவையும் New Brunswickகையும் இணைக்கும் தரைவழிப் பாதை மூடப்பட்டது!

Gaya Raja

தென்னாப்பிரிக்காவின் பல நாடுகளில் இருந்து கனடாவிற்குள் நுழையும் பயணிகளுக்கு தடை

Lankathas Pathmanathan

விரைவில் தேர்தலா? – வேட்பாளர்களுக்கான அழைப்பு விடுத்த பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment