தேசியம்
செய்திகள்

நிபந்தனையற்ற சுகாதாரப் பாதுகாப்பு நிதி – முதல்வர்கள் பிரதமரிடம் கோரிக்கை !

புதிதாக தெரிவாகியுள்ள மத்திய அரசாங்கத்திடமிருந்து நிபந்தனையற்ற சுகாதாரப் பாதுகாப்பு நிதியைப் பெறுவதற்கான கோரிக்கையை மாகாண மற்றும் பிரதேசங்களின் முதல்வர்கள் முன்வைத்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட Justin Trudeauவுடன் ஒரு சந்திப்பை முதல்வர்கள் கோருகின்றனர்.

வியாழக்கிழமை மாகாண மற்றும் பிராந்திய முதல்வர்கள் நடத்திய மெய்நிகர் மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் சிம்மாசன உரையின் முன்னர், இந்த விடயம் குறித்து விவாதிக்க பிரதமருடனான சந்திப்புக்கு முதல்வர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related posts

Quebecகில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள்அறிவிக்கப்பட்டன!

Gaya Raja

தடுப்பூசி பெறாத உறுப்பினர்களை பதவி விலத்தும் கனடிய இராணுவம்

Lankathas Pathmanathan

சீன பயணிகளுக்கு மேலும் இரண்டு மாத கட்டாய COVID சோதனை

Lankathas Pathmanathan

Leave a Comment