புதிய COVID நெறிமுறைகளுடன் இந்தியாவிலிருந்து கனடா வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்த வாரம் நீக்க திட்டமிடப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை முடிவுக்கு வந்த இந்தியாவிலிருந்து கனடா வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை September மாதம் 26ஆம் திகதி இரவு 11:59 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்தியாவிலிருந்து கனடா வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவுள்ளது.
தடை நீக்கப்படுவதற்கு முன்னர், புதன்கிழமை இந்தியாவிலிருந்து நேரடியாக கனடா வந்த விமானங்கங்களில் பயணித்த அனைத்து பயணிகளும் தொற்றுக்கு பரிசோதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது
Delta மாறுபாடு தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கடந்த April 22 முதல் இந்தியாவிலிருந்து நேரடி விமானங்களுக்கு கனடா கட்டுப்பாடுகளை விதித்தமை குறிப்பிடத்தக்கது.