அதிகரித்து வரும் COVID தொற்றின் எண்ணிக்கை காரணமாக Saskatchewanனில் புதிய கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன.
.
உட்புறங்களில் முகக்கவசம் அணிய வேண்டிய உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் Saskatchewanனில் அமுலுக்கு வரவுள்ளது.
மாகாண முதல்வர் Scott Moe, தடுப்பூசி சான்றிதழ் திட்டம் ஒன்றையும் வியாழனன்று அறிவித்தார்.
COVID தொடரின் நான்காவது அலை தடுப்பூசி போடப்படாதவர்களினால் முழுமையாக இயக்கப்படுகிறது என Moe கூறினார்.
தடுப்பூசி போடாத தேர்வு மற்றவர்களுக்கு விளைவுகளை உருவாக்குகிறது என கூறிய முதல்வர், விரைவில் தடுப்பூசி போடாமல் இருக்க முடிவு செய்தவர்களுக்கு இது விளைவுகளை உருவாக்க போகிறது எனவும் தெரிவித்தார்.
தடுப்பூசி சான்றிதழ் திட்டம் October மாதம் 1ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் எனவும் முதல்வர் Moe அறிவித்தார்.
வியாழக்கிழமை Saskatchewanனில் 439 புதிய COVID தொற்றுகளும் ஒரு மரணமும் அறிவிக்கப்பட்டது.