தேசியம்
செய்திகள்

தொற்றின் பரவல் காரணமாக  மீண்டும்  மூட ஆரம்பிக்கும் பாடசாலைகள்!

நேரடி கல்விக்கு மீண்டும் பாடசாலைகள் திறந்த சில நாட்களின் பின்னர், COVID தொற்றின் பரவல் காரணமாக  கனடா முழுவதும் உள்ள பாடசாலைகள் பல மூட வேண்டிய நிலை தோன்றியுள்ளது.

Ontario பாடசாலைகளில் திங்கள் வரை 189 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
Ontarioவில் ஏற்கனவே ஒரு பாடசாலை தொற்றின் காரணமாக மூடப்பட்டுள்ளது

தொற்றின் பரவல் காரணமாக  Charlottetownனில்  உள்ள பாடசாலைகள்  தற்காலிகமாக மூடப்படும் என Prince Edward தீவின் தலைமை சுகாதார அதிகாரி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

Montreal மற்றும் Lavalலில் உள்ள சில பாடசாலைகளில் தொற்றுகளைக் கட்டுப்படுத்த Quebec மாகாணம் விரைவான COVID சோதனைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

New Brunswickகில், 11 பாடசாலைகளில் தொற்றுக்களை உறுதிப்படுத்தியுள்ளதாக மாகாண அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்கள் துன்புறுத்தப் படவில்லை: சீனா தூதர்!

Gaya Raja

வட அமெரிக்க கண்டத்தின் சுதந்திர வர்த்தகத்தின் பாதுகாவலர் கனடா

Lankathas Pathmanathan

பொருளாதாரம், சுகாதாரம் ஆகியன முக்கிய இடம் பிடித்த கட்சி தலைவர்களின் விவாதம்

Leave a Comment