பொது தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு திங்களன்று இரவு 9 மணியுடன் முடிவடைந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான முன்கூட்டிய வாக்குப்பதிவு நான்கு தினங்கள் தொடர்ந்தது.
இந்த முன்கூட்டிய வாக்குப்பதிவின் முதலாவது நாளில் 1.3 மில்லியன் வாக்குகள் பதிவானதாக கனேடிய தேர்தல் திணைக்களம் தெரிவிக்கிறது.
இது 2019 பொது தேர்தலின் போது முதல் நாளில் பதிவான முன்கூட்டிய வாக்களிப்பை விட சற்று அதிகரிப்பு ஆகும்.
அதேவேளை 1 மில்லியன் கனடியர்கள் இதுவரை தபால் மூலம் வாக்களிக்க பதிவு செய்துள்ளதாக கனேடிய தேர்தல் திணைக்களம் இன்று மாலை தெரிவித்தது .
கனேடியர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க செவ்வாய் மாலை 6 மணி வரை பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.