COVID தொற்றின் நான்காவது அலையின் போது தேர்தலை ஏற்பாடு செய்ததற்கு வருத்தப்படவில்லை என Justin Trudeau கூறினார்.
வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பின் போது தேர்தலை ஏற்பாடு செய்தது குறித்து ஏதேனும் வருத்தம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் Trudeau இதனைத் தெரிவித்தார்.
தொற்றின் நான்காவது அலைக்கு மத்தியில் தேர்தலை ஏற்பாடு செய்ததற்காக எதிர்க்கட்சித் தலைவர்களால் பல வாரங்களாக Trudeau விமர்சிக்கப்பட்டார்.
வியாழக்கிழமை நடைபெற்ற கட்சி தலைவர்களின் ஆங்கில மொழி விவாதத்தில் இந்த விடயம் பேசப்பட்டது.
தொற்றின் முடிவை எவ்வாறு வழிநடத்துவது என்பதை அரசாங்கம் தீர்மானிப்பதால், தேர்தலை ஒரு அவசியமானதாக Trudeau சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் தொற்றை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்கள் என்பது குறித்து கனேடியர்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும் எனவும் Trudeau குறிப்பிட்டார்.