தேசியம்
செய்திகள்

சில நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் COVID தடுப்பூசி தேவைப்படலாம்!

சில நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் COVID தடுப்பூசி தேவைப்படலாம் என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழுவின் புதிய பரிந்துரைகளின் அடிப்படையில் கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இந்த தகவலை வெளியிட்டார்.

இதுவரை தடுப்பூசி போடப்படாத மிதமானது முதல், கடுமையான நோய் எதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட mRNA  தடுப்பூசியின் மூன்று அளவுகளைப் பெற வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.

நோயெதிர்ப்பு குறைபாடு உள்ள தனிநபர்கள் தங்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகள் குறித்து தங்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர்களிடம் ஆலோசிக்க வேண்டும் என Tam கூறினார்.

Quebec  மாகாணம் ஏற்கனவே நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும், மற்ற நாடுகளில் கலப்பு தடுப்பூசி அங்கீகரிக்கப்படாத பயணிகளுக்கும் மூன்றாவது தடுப்பூசியை  வழங்குகிறது.

Albertaவும் Ontarioவும் தகுதியான நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கான மூன்றாவது தடுப்பூசிகளை வழங்குகிறது.

Related posts

உக்ரேனுக்காக கனடாவின் ஆதரவுக்கு ஐரோப்பிய ஆணைய தலைவர் நன்றி

Lankathas Pathmanathan

ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரில் Markham நகரில் உள்ள ஒரு தெரு

Lankathas Pathmanathan

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment