கனேடிய பொது தேர்தலில் மொத்தம் பத்து தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை தேர்தலில் தமிழர்கள் இருவர் சுயேச்சை வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.
முரளி கிருஷ்ணன், British Columbiaவில் Fleetwood – Port Kells தொகுதியில் போட்டியிடுகிறார்.
மாகாண சபை தேர்தலில் முன்னர் போட்டியிட்டிருந்தாலும் இவர் போட்டியிடும் முதலாவது பொது தேர்தல் இதுவாகும்.
Fleetwood – Port Kells தொகுதியை கடந்த நாடாளுமன்றத்தில் Liberal கட்சி (Ken Hardie) பிரதிநிதித்துவப்படுத்தியது.
கடந்த தேர்தலில் (2019) Hardie 37.66 சதவீதம் வாக்குகளைப் பெற்றார்.
இந்தத் தொகுதியில் Hardie மீண்டும் போட்டியிடுகின்றார்.