தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

Trudeauவின் பிரச்சார நிகழ்வில் கல் வீச்சு: கனடாவின் மக்கள் கட்சியின் Elgin Middlesex London தொகுதியின் தலைவர் பதவி விலக்கல்!

Justin Trudeauவின் பிரச்சார நிகழ்வில் கல் வீசப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக கனடாவின் மக்கள் கட்சியின் Elgin Middlesex London தொகுதியின் தலைவர் Shane Marshall அவரது பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

மக்கள் கட்சியின் கட்சியின் செய்தித் தொடர்பாளர் இந்தப் பதவி விலக்கலை உறுதிப்படுத்தினார்.

Trudeau மீது கல் வீசப்பட்ட சம்பவத்தின் பின்னர் RCMP உறுப்பினர்கள் Marshall போல் தோன்றிய ஒருவரை அழைத்துச் செல்லும் புகைப்படம் வெளியாகியிருந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தனது பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரச்சாரங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என Trudeau செவ்வாய்கிழமை கூறியிருந்தார்.

Related posts

Albertaவில் ஐயாயிரம் பேர் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வாழும் நிலை

Lankathas Pathmanathan

கனடாவில் 78 சதவிகிதத்தினர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்!

Gaya Raja

British Colombiaவில் வெள்ளம் காரணமாக 500 கால்நடைகள் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment