கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: ரூபன் ராஜகுமார் (Saskatoon West – Liberal)போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
கனேடிய பொது தேர்தலில் மொத்தம் பத்து தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.Liberal கட்சியின் சார்பில் மூவர் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் ரூபன் ராஜகுமார், Saskatchewanனில் Saskatoon West தொகுதியில் போட்டியிடுகிறார். மாகாண சபை தேர்தலில் வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்டிருந்தாலும் இவர் போட்டியிடும் முதலாவது பொது தேர்தல் இதுவாகும்.
Saskatoon West தொகுதியை கடந்த நாடாளுமன்றத்தில் Conservative கட்சி (Brad Redekopp) பிரதிநிதித்துவப் படுத்தியது. கடந்த தேர்தலில் (2019) Redekopp, 48.2 சதவீதம் வாக்குகளை பெற்றார். இந்தத் தொகுதியில் Redekopp மீண்டும் போட்டியிடுகிறார்.