தேசியம்
செய்திகள்

Ontarioவில் இரண்டு தினங்களில் 1,200 வரை தொற்றுக்கள்!

Ontarioவில் இரண்டு தினங்களில் 1,200 வரையிலான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

செவ்வாய்கிழமை பதிவான 1,145 தொற்றுகளின் 581 தொற்றுக்கள் செவ்வாயன்று, 564 தொற்றுக்கள் திங்களன்று பதிவாகியுள்ளன.

மேலதிகமாக ஐந்து மரணங்களையும் இரண்டு தினங்களின் Ontario பதிவு செய்தது.

விடுமுறை காரணமாக திங்களன்று தொற்றுகளின் எண்ணிக்கையை மாகாணம் வெளியிடவில்லை.

கடந்த வாரம் 701 ஆக இருந்த புதிய நோய்த்தொற்றுகள் ஏழு நாள் சராசரி எண்ணிக்கை செவ்வாய்கிழமை 746 ஆக அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமையுடன் Ontarioவில் 83.7 சதவீதமானவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியையும், 77.2 சதவீதமானவர்கள் முழுமையாகவும் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

Related posts

காசாவில் இருந்து வெளியேற்றப்படும் கனடியர்களை வரவேற்க தயார்: எகிப்து தூதர்

Lankathas Pathmanathan

Quebecகில் தொற்று காரணமாக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை  சீராக இருக்கும்

Lankathas Pathmanathan

பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – ஒருவர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment