தேசியம்
செய்திகள்

10 மில்லியன் பேர் Ontarioவில் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்!

Ontario தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக 800க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், 10 மில்லியன் பேர் Ontarioவில் முழுமையாக தடுப்பூசி பெற்ற அறிவித்தலும் வெளியாகியுள்ளது.

சுகாதார அதிகாரிகள் 811 புதிய தொற்றுக்களை ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்தனர்.

இது Ontarioவில் நான்காவது அலையின் அதிக எண்ணிக்கையான 944 தொற்றுக்களை அதிகாரிகள் அறிவித்த ஒரு நாளின் பின்னர் பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் 688 ஆக இருந்த புதிய நோய்த்தொற்றுகள் ஏழு நாள் சராசரி எண்ணிக்கையும் 757 ஆக அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மூன்று மரணங்களையும் அதிகாரிகள் பதிவு செய்தனர்.

Related posts

ஜெருசலேம் மசூதிக்குள் நிகழ்ந்த பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் கனடா

Lankathas Pathmanathan

மோசடி குற்றச்சாட்டில் இருவர் கைது – மூவரை தேடிவரும் OPP

Lankathas Pathmanathan

G10 நாடுகளை விட கனடா COVID பதில் நடவடிக்கைகளை சிறப்பாக கையாண்டது

Lankathas Pathmanathan

Leave a Comment