Alberta COVID கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது.தொற்றுகளின் எண்ணிக்கையும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் விலக்கப்பட்ட கட்டுப்பாடுகளை Alberta மீண்டும் அறிமுகப்படுத்துகிறது.
அத்துடன் தடுப்பூசி பெறுபவர்களுக்கு 100 டொலர் ஊக்கத் தொகையும் வழங்கப்படும் என முதல்வர் Jason Kenney அறிவித்தார்.
சனிக்கிழமை முதல், அனைத்து உட்புற பொது மற்றும் பணியிடங்களில் முகமூடி அணிவது மாகாணம் முழுவதும் கட்டாயமாக்கப்படும்.
பாடசாலைகள் தங்கள் கொள்கைகளை தொடர்ந்து அமைத்துக் கொள்ளும்.
தடுப்பூசி பெறுவதற்கு தகுதியுள்ள 30 சதவீதமானவர்கள் தடுப்பூசி பெறுமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
இதுவரை மருத்துவ மற்றும் அறிவியல் ஆலோசனைகளை புறக்கணித்தவர்களுக்கு 100 டொலர் ஊக்கத்தொகை வெகுமதி என்பதை முதல்வர் ஏற்கவில்லை.
நிதி ஊக்கத்தொகை குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு தடைகளை குறைக்கும் என முதல்வர் Kenney நம்புகிறார்.