Ontario மாகாணம் புதிய COVID தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம் ஒன்றை அறிவித்தது.
உணவகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், திரையரங்குகளுக்கான தடுப்பூசி முறையை புதன்கிழமை Ontario மாகாணம் வெளியிட்டது.
Ontario மாகாண முதல்வர் Doug Ford இந்தத் திட்டத்தை வெளியிட்டார்.
இந்தத் தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
தொற்று பரவலின் மத்தியில் அத்தியாவசியமற்ற வணிகங்களை திறந்து வைக்க இந்தத் திட்டம் அவசியம் என முதல்வர் Ford தனது அறிவித்தலின் போது கூறினார்.
இந்தத் தடுப்பூசி சான்றிதழ் பெற தகுதியுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு COVID தடுப்பூசிகளை பெற்றிருக்க வேண்டும் என முதல்வர் தனது அறிவித்தலின் போது கூறினார்.