Ontarioவில் ஏழு நாட்களுக்கான COVID தொற்றுக்களின் சராசரி 700ஐ தாண்டியுள்ளது
செவ்வாய்க்கிழமை மொத்தம் 525 தொற்றுக்களை மாகாண சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.
இதன் மூலம் ஏழு நாட்களுக்கான தொற்றின் நாளாந்த சராசரி June மாதத்தின் ஆரம்பத்தின் பின்னர் முதல் தடவையாக 700ஐ தாண்டியுள்ளது
ஏழு நாட்களுக்கான தொற்றின் நாளாந்த சராசரி கடந்த வாரத்தில் இருந்து இந்த வாரம் 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் 600 ஆக இருந்த ஏழு நாட்களுக்கான தொற்றின் நாளாந்த சராசரி செவ்வாய்க்கிழமை 702 ஆக அதிகரித்துள்ளது.