தேசியம்
செய்திகள்

Ontarioவில் 700ஐ அண்மிக்கும் ஏழு நாட்களுக்கான தொற்றுக்களின் சராசரி!

Ontarioவில் ஏழு நாட்களுக்கான COVID தொற்றுக்களின் சராசரி 700ஐ அண்மிக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 740 தொற்றுக்களை மாகாண சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.

இதன் மூலம் ஏழு நாட்களுக்கான தொற்றின் நாளாந்த சராசரி 688ஆக அதிகரித்தது.

இந்த எண்ணிக்கை கடந்த வாரம் 564ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை பதிவான புதிய தொற்றுக்களில் 551 பேர் தடுப்பூசி பெறாதவர்கள் என சுகாதார அமைச்சர் Christine Elliott குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு பேர் தொற்றின் காரணமாக மரணமடைந்ததாகவும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் Ontarioவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,498 ஆக அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை Ontarioவில் 835 தொற்றுக்கள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

சமூகத்துடன் நெருக்கமான உறவுகளை பேண விரும்புகிறேன்: Montreal காவல்துறையின் புதிய தலைவர்

Lankathas Pathmanathan

Pfizer தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட கனேடிய பிரதமர்

Gaya Raja

Montreal இணைய வானொலி ஊடகர் Haitiயில் கொலை

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!