December 12, 2024
தேசியம்
செய்திகள்

நான்காவது அலை குறித்த புதிய modelling விவரங்கள் அடுத்த வாரம் வெளியாகும்

COVID தொற்றின் நான்காவது அலை குறித்த புதிய modelling விவரங்கள் அடுத்த வாரம் கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரியினால் வெளியிடப்படவுள்ளன.

இது கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் (Public Health Agency of Canada – PHAC) திட்டங்களின் மாற்றத்தை குறிக்கிறது.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பொது சுகாதார நிறுவனம் தொற்று குறித்தும் தடுப்பூசி வழங்கல் குறித்தும் செய்தியாளர் சந்திப்பு எதையும் நடத்தவில்லை.

ஆனால் கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam, புதிய modelling விவரங்களை அடுத்த வாரம் வெளியிடுவார் என வெள்ளிக்கிழமை பொது சுகாதார நிறுவனம் அறிவித்தது.

இறுதியாக July மாதம் 30ஆம் திகதி நடைபெற்ற modelling விவரங்கள் அறிவிக்கும் மாநாட்டில், கனடா தொற்றின் நான்காவது அலைக்குள் செல்கிறது என்ற எச்சரிக்கை வெளியாகியது.

தேசிய நாளாந்த தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து வலுவான எழுச்சிப் பாதையில் அதிகரித்து செல்கிறது என வெள்ளியன்று வெளியான தரவுகள் தெரிவிக்கின்றன.

தற்போது தொற்றின் ஏழு நாள் சராசரியாக தினசரி 2,848 புதிய தொற்றுக்கள் பதிவாகின்றன.

இது கடந்த வாரத்தை விட 29 சதவீதம் அதிகரிப்பாகும்.

Related posts

Manitobaவில் எல்லை முற்றுகை அகற்றப்படும்: RCMP நம்பிக்கை

Lankathas Pathmanathan

அதிகரிக்கும் வேலையற்றோர் விகிதம்!

Lankathas Pathmanathan

கனடியர்களின் ஆயுட்காலம் மீண்டும் குறைந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment