Ontarioவில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக 600க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்யப்பட்டுள்ளது .
Ontarioவில் வியாழக்கிழமை மாத்திரம் 678 புதிய தொற்றுக்கள் பதிவாகின.
இதனால் தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஒரு வாரத்திற்கு முன்னர் 498 ஆக இருந்த ஏழு நாள் சராசரி வியாழக்கிழமை 646 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும் வியாழனன்று மரணங்கள் எதுவும் Ontarioவில் பதிவாகவில்லை.