நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை இரண்டாயிரம் வரையிலான COVID தொற்றுக்கள் பதிவாகின.
Ontarioவின் நாளாந்த தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் திங்கட்கிழமை 500க்கு மேல் பதிவானது.
திங்கட்கிழமை 526 புதிய தொற்றுக்களை பதிவு செய்த சுகாதார அதிகாரிகள் மரணங்கள் எதையும் பதிவு செய்யவில்லை.
Ontarioவின் புதிய தொற்றுகளின் ஏழு நாள் சராசரி தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த வாரம் திங்கட்கிழமை 283 ஆக இருந்த இந்த எண்ணிக்கை இந்த வாரம் திங்கட்கிழமை 469ஆக பதிவானது.
திங்கட்கிழமை பதிவான புதிய தொற்றாளர்களில் 353 பேர் தடுப்பூசி போடாதவர்கள் எனவும், 60 பேர் ஒரு தடுப்பூசியை பெற்றவர்கள் எனவும் Ontario மாகாண சுகாதார அமைச்சர் கூறுகிறார்.
திங்கட்கிழமை British Columbiaவில் 461 தொற்றுக்களையும் ஒரு மரணத்தையும் அதிகாரிகள் அறிவித்தனர்.
Quebecகில் 409 தொற்றுக்களும், Albertaவில் 392 தொற்றுக்களும் ஒரு மரணமும் திங்கட்கிழமை பதிவானது.
ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் திங்கட்கிழமை தலா நூறுக்கும் குறைவான தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.