தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

September 20 கனடாவில் தேர்தல்!

September 20ஆம் திகதி கனடிய பொது தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் Justin Trudeau ஆரம்பிக்கவுள்ளார்.

இந்த வார இறுதியில் Trudeau, ஆளுநர் நாயகத்திடம் 43வது நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த கோருவார் என தெரிவிக்கப்படுகின்றது.

2021ஆம் ஆண்டுக்கான தேர்தலுக்கான பிரசாரம் 36 நாட்கள் நீடிக்கவுள்ளது. கனேடிய தேர்தல் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட மிகக் குறுகிய கால தேர்தலுக்கான பிரசார நாட்கள் இதுவாகும்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு வியாழக்கிழமை வரை Liberals 250, Conservatives 291, NDP 169, பசுமை கட்சி 112 என வேட்பாளர்களை நியமித்துள்ளது.

Quebec மாகாணத்தில் மாத்திரம் போட்டியிடும் Bloc Quebecois 41 வேட்பாளர்களை நியமித்துள்ளது.

தற்போது நாடாளுமன்றத்தில் கட்சிகள் கொண்டுள்ள ஆசனங்களின் எண்ணிக்கை

Liberal: 155
Conservative: 119
Bloc Québécois: 32
NDP: 24
Independent: 5
Green Party: 2
பெரும்பான்மை அரசாங்கத்திற்கு, ஒரு கட்சி 170 இடங்களை வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது .

Related posts

CERB கொடுப்பனவுகளை தவறான முறையில் பெற்றதனால் பணிநீக்கம் செய்யப்படும் CRA ஊழியர்கள்

Lankathas Pathmanathan

400 பில்லியன் டொலர்கள் வரை பற்றாக்குறை அதிகரிக்கலாம் – நிதியமைச்சர் Chrystia Freeland

Lankathas Pathmanathan

குழந்தைகளுக்கான ஆரம்ப COVID தடுப்பூசி சோதனை தரவை Health கனடாவுக்கு சமர்ப்பித்துள்ளோம்: Pfizer அறிவிப்பு

Gaya Raja

Leave a Comment