February 23, 2025
தேசியம்
செய்திகள்

Newfoundland கடற்கரையில் தமிழ் அகதிகள் வருகையின் 35வது ஆண்டு நிறைவு!

கனடாவின் Newfoundland மாகாண கடற்கரையில் தமிழ் அகதிகள் வருகையின் 35 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

கனேடிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் மெய்நிகர் நிகழ்வாக இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கனடாவின் குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Marco Mendicino, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, கப்பலில் வருகை தந்த தமிழர்களை கடலில் இருந்து காப்பாற்றிய Gus Daltonனின் குடும்பத்தினர் உட்பட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

146 ஆண்கள், 4 பெண்கள், 5 குழந்தைகள் என மொத்தம் 155 தமிழர்கள் Newfoundland கரையில் காப்பாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனேடிய இசைக் கலைஞர் Gordon Lightfoot மரணம்

கனடாவில் COVID காரணமாக 29,900 மரணங்கள் பதிவு

Lankathas Pathmanathan

Ontario மாகாண சபை தேர்தல் February 27?

Lankathas Pathmanathan

Leave a Comment