February 22, 2025
தேசியம்
செய்திகள்

கனடாவின் குறைந்த தடுப்பூசி பெற்றவர்களின் விகிதங்கள் Prairie மாகாணங்களில் பதிவு!

கனடா முழுவதும் குறைந்த தடுப்பூசி பெற்றவர்களின் விகிதங்கள் Alberta, Manitobaவில் உள்ள பகுதிகளில் பதிவாகியுள்ளன.

கனடா Delta மாறுபாட்டினால் ஏற்படும் நான்காவது அலையின் ஆரம்பத்தில் உள்ள நிலையில் அதன் தீவிரம் தடுப்பூசி பெறுவதைப் பொறுத்தது என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

கனடாவின் தடுப்பூசி பெற்றவர்களின் விகிதங்கள் உலகளாவிய ரீதியில் மிக உயர்ந்த நிலையில் இருந்தாலும், கனடாவின் குறைந்த தடுப்பூசி பெற்றவர்களின் விகிதங்கள் Prairies மாகாணங்களில் பதிவாகியுள்ளது.

ஏறக்குறைய ஆறு மில்லியன் கனேடியர்கள் இதுவரை தடுப்பூசி போடவில்லை என தரவுகள் தெரிவிக்கிறது.

செவ்வாய்க்கிழமை மாலை வரை 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 81.4 சதவிகிதமானவர்கள் குறைந்தபட்சம் ஒரு COVID தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

அதேவேளை 70.3 சதவிகிதமான கனேடியர்கள் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

COVID தொற்றின் ஆரம்பத்தில் இருந்து கனடாவில் 1.4 மில்லியன் தொற்றுக்களும் 26,678 மரணங்களும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடா இந்த வாரம் 9.5 மில்லியன் தடுப்பூசிகளை பெறுகின்றது

Gaya Raja

பொது தேர்தல் விவாதங்களுக்கு ஐந்து கட்சித் தலைவர்கள் அழைப்பு!

Gaya Raja

Ontarioவில் எரிபொருளின் விலை லீட்டருக்கு 7 சதத்தினால் குறையும்

Lankathas Pathmanathan

Leave a Comment