முதற்குடியின வதிவிடப் பாடசாலைகளின் தேடல்களுக்கு அதிக நிதியுதவி வழங்கப்படும் என கனேடிய அரசு உறுதியளிக்கிறது.
இதற்காக மத்திய அரசு கூடுதலாக 321 மில்லியன் டொலர்களை செலவிட இருப்பதாக அறிவித்துள்ளது.
சுதேச சேவைகள் அமைச்சர் Marc Miller, பூர்வீக உறவுகளின் அமைச்சர் Carolyn Bennett ஆகியோர் இணைந்து இந்த அறிவித்தலை வெளியிட்டனர்.
முதற்குடியின பாடசாலைகளின் தேடல்களுக்கும் பழங்குடி சமூகங்கள் இந்தத் தேடலைத் தொடர்வதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த விடயம் குறித்த புதிய சட்ட நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக ஒரு சிறப்பு உரையாசிரியரை பெயரிடவும் திட்டமிட்டுள்ளதாகவும், ஒரு தேசிய நினைவுச் சின்னத்தை உருவாக்குவதாகவும் அரசாங்கம் தெரிவித்தது.