December 12, 2024
தேசியம்
செய்திகள்

பிரதமரின் தேர்தலுக்கான கோரிக்கையை மறுக்க வேண்டும் – ஆளுநர் நாயகத்திற்கு புதிய மனு!

கனேடிய பிரதமரின் தேர்தலுக்கான அனைத்து கோரிக்கையையும் மறுக்குமாறு கோரும் இணைய மனு ஒன்றில் 2500க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

திடீர் தேர்தலுக்காக பிரதமர் Justin Trudeauவின் எந்தவொரு கோரிக்கையையும் நிராகரிக்குமாறு ஆளுநர் நாயகம் Mary Simonனை கோரும் வகையில் இந்த மனு அமைந்துள்ளது.

இந்த வாரம் பிரதமர் Trudeau ஒரு தேர்தல் அழைப்பை வெளியிடுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் Democracy Watch என்ற இலாப நோக்கற்ற அமைப்பு இந்த மனுவை தயாரித்தது .

ஒரு திடீர் தேர்தல் பல வாக்காளர்களுக்கு ஆபத்தானது என Democracy Watch தனது செய்தி குறிப்பில் தெரிவிக்கின்றது.

பலர் இன்னும் முழுமையாக தடுப்பூசி போடாத நிலையில் இந்த இலையுதிர்காலத்தில் கனடா முழுவதும் COVID தொற்றின் நான்காவது அலை எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை குறித்த கனடிய அரசின் பயண ஆலோசனை!

Durham காவல்துறை அதிகாரிகள் இருவர் காயம்

Lankathas Pathmanathan

இரண்டு இடைத்தேர்தலில்  Progressive Conservative வெற்றி

Lankathas Pathmanathan

Leave a Comment